Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை- கஞ்சா பறிமுதல்

திருச்சி மத்திய சிறையில் மாதந்தோறும் போலீசார் சோதனை நடத்துவது வழக்கம். அந்த வகையில் திருச்சி மத்திய சிறை அதிகாரி வெங்கடசுப்பிரமணியன் தலைமையில் சிறை துறை போலீசார் நேற்று திடீரென்று மத்திய சிறை வளாகத்திற்குள் அதிரடி சோதனை நடத்தினர். அப்பொழுது ஆயுள் கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் உள்ள அறை முழுவதும் போலீசார் சோதனை செய்தனர்.அப்பொழுது 10 வது பிளாக் பகுதியில் உள்ள அறையை போலீசார் சோதனை செய்தனர். அங்கு அந்த அறையில்ஒன்றும் இல்லை இதை எடுத்து அறையில் இருந்த வாலியை சோதனை செய்து பார்த்தனர். அதில் பொட்டலமாக கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதை எடுத்து போலீசார் அதனை எடுத்து சோதனை செய்து பார்த்த அது 10 கிராம் கஞ்சா என்று தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதை எடுத்து சிறைத்துறை அதிகாரி அங்கு இருந்த கைதிகளிடம் விசாரணை செய்தபோது
இரண்டு கைதிகள் கஞ்சா பொட்டலத்தை மறைத்து வைத்தது தெரிய வந்தது.
இது குறித்து கே கே நகர் போலீசில் சிறை அதிகாரி வெங்கடசுப்பிரமணியன் புகார் கொடுத்தார்.
புகார் பேரில் போலீசார் சேலம் அசுரை சேர்ந்த தேவா (வயது 27) நாமக்கல் சேத்தமங்கலத்தை சேர்ந்த பாண்டியன் (வயது 34) ஆகிய இரண்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதேபோன்று திருச்சி ரெட்டமலை ரோடு ரயில்வே பாலம் அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்புசப் இன்ஸ்பெக்டர் சேசுராஜ் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது கஞ்சா விற்று கொண்டிருந்த ராம்ஜி நகர சேர்ந்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 1.4 கஞ்சாவை பறிமுதல் செய்து உள்ளனர்.

error: Content is protected !!