Skip to content
Home » ராசிபலன். இன்று

ராசிபலன். இன்று

இன்றைய ராசிபலன்… (23.04.2024)…

செவ்வாய்கிழமை….(23.04.2024).. மேஷம்….   மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.  உங்கள் சகோதரர் மற்றும் சகோதரியால் சில உதவிகளை பெறுவீர்கள். நாளை பணியில் சகபணியாளரிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம்… Read More »இன்றைய ராசிபலன்… (23.04.2024)…

இன்றைய ராசிபலன்… (23.03.2024)

சனிக்கிழமை.. மேஷம் இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடின… Read More »இன்றைய ராசிபலன்… (23.03.2024)

இன்றைய ராசிபலன்… (30.11.2023)…

இன்றைய ராசிபலன்.. (30.11.2023) மேஷம் இன்று உங்களுக்கு மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும். ரிஷபம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படும். குடும்பத்தில் உள்ள நெருக்கடிகளை சமாளிக்க நீங்கள் பொறுப்புடனும், சிக்கனத்துடனும் நடந்து கொள்வது அவசியம். உற்றார் உறவினர்கள் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். மிதுனம் இன்று பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் அனுகூலம் கிட்டும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். வேலையில் தடைப்பட்ட ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். சேமிப்பு உயரும். கடகம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியத்தை கூட சிரமபட்டு முடிக்க நேரிடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். சிம்மம் இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் பணி சுமை குறையும். வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். கன்னி இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். துலாம் இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் உருவாகலாம். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க வேண்டிய நிலை வரும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது தெம்பை கொடுக்கும். விருச்சிகம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. பேச்சால் வீண் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். தனுசு இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன அமைதி அடைவீர்கள். மகரம் இன்று வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். கும்பம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன்… (30.11.2023)…

இன்றைய ராசிபலன்… (08.10.2023)

மேஷம் இன்று குடும்பத்தில் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்ககூடும். பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். ரிஷபம் இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீனகரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நினைத்தது நிறைவேறும். மிதுனம் இன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். உடன்பிறப்புக்கள் வழியாகவும் மனசங்கடங்கள் ஏற்படலாம். தொழிலில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றத்தை காணலாம். தெய்வ வழிபாடு நன்மை தரும். கடகம் இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சுபகாரியங்கள் கைகூடும். சிம்மம் இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பொருளாதார ரீதியான பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியான வெளிவட்டார நட்பு கிட்டும். கன்னி இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். துலாம் இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விருச்சிகம் இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்களால் புதிய வாய்ப்பு கிடைக்கும். தனுசு இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவை இல்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அமைதியாக இருப்பது, மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மகரம் இன்று பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் கிட்டும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். எதிர்பாராத பண வரவால் மகிழ்ச்சி உண்டாகும். தேவைகள் பூர்த்தியாகும். கும்பம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். பெரியவர்களுடன் நட்பு ஏற்படும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். மீனம் இன்று உறவினர்கள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் உண்டாகும். வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பழைய நண்பர்களின் சந்திப்பால் மன மகிழச்சி அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

இன்றைய ராசிபலன்… (03.09.2023)

ஞாயிற்றுக்கிழமை… மேஷம் இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு தொழில் ரீதியாக பயணம் செல்வதற்கான வாய்ப்பு அமையும். ரிஷபம் இன்று குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். கையிருப்பு குறையும். எதிர்பார்த்த உதவி உரிய நேரத்தில் கிடைக்கும். பண பற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும். மிதுனம் இன்று பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். திருமண சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். கடகம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். சிம்மம் இன்று உங்கள் ராசிக்கு பகல் 10.38 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. வர வேண்டிய பணவரவில் சில தடை தாமதங்கள் ஏற்படலாம். உறவினர்களிடம் பேசும் போது கவனமாக இருப்பது நல்லது. புதிய முயற்சிகளில் மதியத்திற்கு பின் ஈடுபட்டால் அனுகூலம் உண்டாகும். கன்னி இன்று உங்கள் ராசிக்கு பகல் 10.38 முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் குடும்பத்தில் குழப்பமும் நிம்மதியற்ற நிலையும் ஏற்படும். முக்கிய பேச்சுவார்த்தைகளை தள்ளி வைப்பது நல்லது. வெளியாட்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை. துலாம் இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வருமானம் பெருகும். விருச்சிகம் இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். அசையா சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். தனுசு இன்று நீங்கள் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். குடும்பத்தில் ஒற்றுமை சற்று குறைந்து காணப்படும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கடன்கள் ஓரளவு குறையும். மகரம் இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் வீட்டில் அமைதி குறையும். உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இதுவரை இருந்த பொருளாதார நெருக்கடிகள் சற்று குறையும். கும்பம் இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலப்பலன் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். மீனம் இன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் இருக்கும். சிலருக்கு வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

இன்றைய ராசிபலன் – (26.08.2023)

மேஷம் இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு காலை 8.37 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் பொறுமை தேவை. எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சுப முயற்சிகளையும், பயணங்களையும் மதியத்திற்கு பிறகு மேற்கொள்வது நல்லது. ரிஷபம் இன்று உங்கள் ராசிக்கு காலை 8.37 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். மிதுனம் இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலை தேடுபவர்க்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கடகம் இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் உடன்பிறப்புகளுடன் ஒற்றுமை பலப்படும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வரும். சிம்மம் இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் தோன்றும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பிரச்சினையை தவிர்க்கலாம். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும். கன்னி இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். துலாம் இன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். இதுவரை வராத பழைய பாக்கிகள் கைக்கு வந்து சேரும். விருச்சிகம் இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவர். கடன்கள் குறையும். தனுசு இன்று எதிர்பாராத விதமாக மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். வீட்டில் பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பொன் பொருள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். மகரம் இன்று உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். திருமண சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். கும்பம் இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் எதிர்பாராத இனிய மாற்றங்கள் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மீனம் இன்று பிள்ளைகள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். புதிய தொழில் தொடங்குவதற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

இன்றைய ராசிபலன்- (06.08.2023)

ஞாயிற்றுக்கிழமை (06.08.2023)… மேஷம் இன்று உங்கள் உடல் நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் மன அமைதி குறையும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பார்த்த… Read More »இன்றைய ராசிபலன்- (06.08.2023)

இன்றைய ராசிபலன் -(09.07.2023)…..

ஞாயிற்றுக்கிழமை (09.07.2023) மேஷம் இன்று குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இடையூறுகள் ஏற்படலாம். முயற்சி செய்தால் மட்டுமே எடுத்த காரியத்தில் வெற்றி காண முடியும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனக்குழப்பம் சற்று குறையும். ரிஷபம் இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் புது உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ள பிரச்சினை தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மிதுனம் இன்று உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் இருந்த பொருளாதார பிரச்சினைகள் குறையும். திடீரென்று பயணம் செல்ல நேரிடும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் லாபகரமான பலன்கள் உண்டாகும். கடகம் இன்று நீங்கள் நினைத்த காரியத்தை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் வரலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் லாபம் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது. சிம்மம் இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சுபகாரிய முயற்சிகளை தவிர்க்கவும். கன்னி இன்று குடும்பத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். தொழில் விஷயமாக வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். பழைய கடன் பிரச்சினை தீரும். துலாம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி சாதகமான பலன் ஏற்படும். உறவினர்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். திடீர் பணவரவு உண்டாகும். விருச்சிகம் இன்று தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். முன்கோபத்தால் வேலையில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. நண்பர்களால் ஆதாயம் கிட்டும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தனுசு இன்று உங்களுக்கு குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மனகுழப்பம் அதிகரிக்கலாம். உடல் ஆரோக்கியம் சீராக உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. எதையும் ஒருமுறைக்கு பல முறை சிந்தித்து செயல்பட்டால் அனுகூலங்கள் உண்டாகும். தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மகரம் இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். கும்பம் இன்று உங்களுக்கு பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். நெருங்கியவர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான பலன் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் புதிய நபர்களால் அனுகூலப் பலன் கிட்டும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன் -(09.07.2023)…..

இன்றைய ராசிபலன் … (24.06.2023)

மேஷம் இன்று உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் பெண்களால் சந்தோஷம் உண்டாகும். வேலையில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும். ரிஷபம் இன்று நீங்கள் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி அடைய சற்று நிதானத்துடனும் கவனத்துடனும் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் தாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான அரசு வழி உதவிகள் எளிதில் கிடைக்கும். மிதுனம் இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். வேலையில் மேலதிகாரிகளின் நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் உண்டாகும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கடகம் இன்று உடல் நிலை சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். பண நெருக்கடியால் கடன் வாங்க நேரிடும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிம்மம் இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் வியாபார முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிட்டும். கன்னி இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் தோன்றும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் பெரிய இழப்பை தவிர்க்கலாம். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு புது தெம்பையும், நம்பிக்கையையும் கொடுக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். துலாம் இன்று உறவினர்கள் வருகையால் வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் பல மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். விருச்சிகம் இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். தனுசு இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக சிறு சிறு நெருக்கடிகள் தோன்றும். பிள்ளைகள் வகையில் சுப செலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்கான செயல்களில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கடன் பிரச்சினை குறையும். மகரம் இன்று உங்களுக்கு தேவையற்ற அலைச்சல் டென்ஷன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. மன அமைதி குறையும். கும்பம் இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில் சம்பந்தமான வெளிவட்டார நட்பு விரிவடையும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும். சுபகாரியம் கைகூடும். மீனம் இன்று எந்த காரியத்தையும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் அடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

இன்றைய ராசிபலன் –  22.06.2023

மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்கள் வாயிலாக உதவிகள் கிடைக்கும். ரிஷபம் இன்று தொழில் ரீதியாக பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டு. பழைய பாக்கிகள் வசூலாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். மிதுனம் இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படலாம். வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும்.  அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவியால் தொழில் வளர்ச்சிக்கான பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை குறையும். கடகம் இன்று உங்களுக்கு உறவினர்களின் திடீர் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். சுப காரிய முயற்சிகளில் சாதகமான நிலை உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிட்டும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். சிம்மம் இன்று உங்களுக்கு உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். மற்றவர்களுடன் ஏற்பட்ட  மனஸ்தாபங்கள் படிப்படியாக குறையும். எந்த விஷயத்திலும் பொறுமையுடனும், கவனமுடனும் இருப்பது நல்லது. வியாபார சம்பந்தமான புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். கன்னி இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். உறவினர்கள் உதவியால் கடன் பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். துலாம் இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்கள் வேலையில் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். விருச்சிகம் இன்று வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் செயல்களால் நிம்மதி குறைவு உண்டாகும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது. தனுசு இன்று உங்களுக்கு மனக்குழப்பமும், கவலையும் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வது உத்தமம். மகரம் இன்று உற்றார் உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகும். கும்பம் இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராகும். மீனம் இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் எதிர்பாராத திடீர் விரயங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.

error: Content is protected !!