தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடியுள்ள நிலையில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது.
மறைந்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, சட்டப்பேரவை முன்னாள் செயலாளர் ராமசாமி, திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் பாரதிராஜா ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் வாசித்தார். இரங்கல் தீர்மானம் வாசித்த பின் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
