பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக மக்கள் இப்போது சட்டசபையை பார்க்கும் அளவுக்கு தமிழக அரசு அதன் மாண்பை கெடுத்து வைத்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், சட்டசபை முடிந்துவிட்டதால் மாலை நேரத்தில் பிக் பாஸை பாருங்கள் என்று தனது நண்பரிடம் கூறியதாக குறிப்பிட்ட அவர், தற்போதைய தலைமுறையினர் சட்டமன்றம் இப்படித்தான் நடக்குமோ என்று தவறாக நினைக்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்தார்.
