ஊழலை ஒழிக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை வரவேற்பதாக தெரிவித்த பாமக MLA சௌமியா அன்புமணி, அந்த ஊழல் ஒழிப்பின் உண்மையான பயன் மக்களை சென்று சேர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சட்டப்பேரவையில் இன்று (செப்.8) பேசிய அவர், மின்சாரத்துறையில் ஊழலை ஒழித்தால் மின்கட்டணமும், கல்வித்துறையில் ஊழலை ஒழித்தால் கல்விக் கட்டணமும் குறைய வேண்டும் என்று அவர் தெரிவித்தார். எனவே, வெறும் நடவடிக்கைகளோடு நிறுத்திவிட கூடாது என அவர் கேட்டுக்கொண்டார்.
