திருச்சி ஏர்போர்ட் குளவாய்பட்டி ரோட்டில் புதிய இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது இந்த முகாமில், அரசுத் திட்டத்தின் கீழ் புதிதாக வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இங்கு மர்ம நபர்கள் நுழைந்து 12 வீடுகளின் பூட்டுகளை உடைத்து, வயரிங் மற்றும் வயர் ரோல், கட்டிங் பிளேடு, ஸ்க்ரூ டிரைவர், உளி, சுத்தியல் உள்ளிட்ட ரூ.50,000 மதிப்பிலான பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தினால் 12 வீடுகளின் கதவுகள் சேதப்பட்டன.
இது தொடர்பாக கட்டுப்பாட்டுப் பொறியாளராகப் பணிபுரியும் சுரேந்தர் என்பவர் அளித்த புகாரின்பேரில், ஏர்போர்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்து கார்த்திகுமார், அருண்குமார், கார்த்திகேயன் மற்றும் மணீஷ் என்ற மணிமுத்துராஜ் ஆகிய 4 பேரை
கைது செய்தனர்.
