பேரவையில் இருந்து வௌிநடப்பு செய்த சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது…. ஒரு புரோட்டாகால் கூட முதலமைச்சருக்கு தெரியாதது வருத்தமளிக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். குடியரசுத் தலைவருக்கு தனி புரோட்டாகால் உள்ளது; அது ஆளுநருக்கு கிடையாது. எந்தவொரு கேள்விக்கும் முதல்வரிடம் தெளிவான பதில் இல்லை. மின்வெட்டு சரிசெய்ய அவகாசம் கேட்கிறது தவெக அரசு; அதிலும் திமுக மீது

பழிபோடுகிறது. மீண்டும் மீண்டும் அவகாசம் கேட்டுக் கொண்டே இருக்கிறார். விவசாயிகள் போராட்டத்தை திமுக தூண்டிவிடுவதாகக் கூறி விவசாயிகளை கொச்சைப்படுத்துகிறார் விஜய். முதலமைச்சர் விஜய் ஊடகங்களுக்கும் பதில் சொல்ல மறுக்கிறார். பேரவையில் எங்களுகு்கும் பதில் சொல்ல மறுக்கிறார். பேரவையில் இருந்து வௌிநடப்பு செய்தோம். இன்று சட்டப்பேரவையில் பேசி பேரவையையே ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றியுள்ளார். சட்டமன்றத்தை சினிமா தியேட்டர் போல ஆக்கிட்டாங்க. இன்னைக்கு விசில் எல்லாம் அடிக்கிறாங்க. இதெல்லாம் சட்டசபை பாக்காதது.
