பண்ருட்டி அருகே காளான் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. பண்ருட்டி அருகே உள்ள கீழிருப்பு கிராமத்தைசேர்ந்தவர்
சிவகுமார், வயது 42,விவசாயி. இவரது மனைவி கவிதா, வயது 37, அவர்களது மகள் ஆஷிகா, வயது 12 மூவரும் அப்பகுதியில் உள்ள பலாத்தோப்பில் இயற்கையாக விளைந்திருந்த காளான்களைப் பறித்து, வீட்டில் சமைத்துச் சாப்பிட்டுள்ளனர்.
சாப்பிட்ட சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அனைவரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
