Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நவீன் பட்நாயக் விரைவில் நலம்பெற, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பிஜூ ஜனதா தள கட்சி தலைவரும், ஒடிசா முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் கடந்த சில தினங்களாக கழுத்து வலியால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து கடந்த 20ம் தேதி மும்பை சென்ற நவீன் பட்நாயக், அங்குள்ள கோகிலா பென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் 22ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முதுகெலும்பு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதன்படி, நவீன் பட்நாயக்குக்கு நேற்று முதுகெலும்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தற்போது அவர் நலமுடன் உள்ளார்.நவீன் பட்நாயக் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.
error: Content is protected !!