நேற்று (ஜூன் 1) தங்கம் விலை ரூ.1,040 குறைந்த நிலையில், வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதுமில்லை. இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,16,000-க்கும், ஒரு கிராம் ரூ.14,500-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.290-க்கு விற்பனையானது.
நகைப் பிரியர்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (ஜூன் 2) தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. இதன்படி ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,16,000-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.14,500-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.290-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,90,000-க்கு விற்பனையாகிறது.
