சென்னை: திருவேற்காடு, காடுவெட்டி பகுதியை சேர்ந்த பாபு-சங்கீதா தம்பதியின் ஒரு வயது ஆண் குழந்தை மர்ம காய்ச்சலால் உயிரிழந்தது. நேற்று முன்தினம் காய்ச்சலால் அவதிப்பட்ட குழந்தைக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
