திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட ‘மகளிர் விடியல் பேருந்து பயண’ திட்டத்தின் விரிவாக்கமான ‘வெற்றி பயணம்’ திட்டத்தை, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்து முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். இதன்மூலம் மாநகர, நகர்ப்புற எக்ஸ்பிரஸ், டீலக்ஸ், எல்.எஸ்.எஸ். மற்றும் புறநகர், 40 கி.மீ-க்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளுக்கும் மகளிர் இலவசப் பயணம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 12,695 அரசுப் பேருந்துகள் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
மகளிருக்கான ”வெற்றி பயண” திட்டம்- முதல்வர் விஜய் துவங்கி வைத்தார்
