Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமராவதி ஆற்றிலிருந்து தண்ணீர் திறக்கக் கோரி..கரூர் கலெக்டரிடம் மனு

அமராவதி ஆற்றில் தண்ணீரின்றி தவிக்கும் கிராம மக்கள்: அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி கரூர் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு.

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம், தென்னிலை சுற்று வட்டார பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாகவும், குடிநீர் ஆதாரமாகவும் அமராவதி ஆறு விளங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக ஆற்றில் நீர்வரத்து இல்லாததால்,

நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் முற்றிலுமாக வற்றிப்போயுள்ளன.

இதனால் கடந்த 15 நாட்களாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, கால்நடைகளுக்கும் தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் அமராவதி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர் சின்னதாராபுரம் பகுதியை வந்தடைவதற்குள், நடுவழியிலேயே தடுப்பணைகள் அமைக்கப்பட்டு அடைக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


எனவே, சின்னதாராபுரம் பகுதி மக்களின் தாகத்தைப் போக்கவும், கால்நடைகளைக் காப்பாற்றவும், அமராவதி அணையில் இருந்து உரிய முறையில் தண்ணீரைத் திறந்துவிட்டு, அது தங்கு தடையின்றி கரூர் வரை வந்தடைவதை நடவடிக்கை எடுக்க கோரி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை மனு வழங்கினர்.

error: Content is protected !!