தமிழில், ‘திருடன் போலீஸ்’, ‘உள்குத்து’, தெலுங்கில் ‘நினு வீதனி நீ தானு நேனே’, ‘சிங்கிள்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு, அடுத்து இயக்கும் படம் ‘வெல்கம் டு வைல்டுலைஃப்’.
இதில் சிவ ராஜ்குமார் ஹீரோவாக நடிக்கிறார். கன்னடத்தில் உருவாகும் இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை கேவிகே புரொடக்ஷன்ஸ் சார்பில் குடிபுடி விஜய் குமார் தயாரிக்கிறார்.
இதன் முதல் தோற்ற போஸ்டரை சிவ ராஜ்குமார் மற்றும் கீதா சிவ ராஜ்குமார் இணைந்து வெளியிட்டனர். மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
