Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விதவை பெண் தீக்குளித்து தற்கொலை…. திருச்சி க்ரைம்

விதவைப் பெண் தீக்குளித்து தற்கொலை

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஆர்.எஸ். வையம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேங்கட சுப்ரமணி. இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 56). வேங்கட சுப்ரமணி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார் .
இந்த தம்பதிகளுக்கு விஜயலட்சுமி 31 என்ற மகள் உள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மதுரையில் வசித்து வருகிறார். கணவன் மறைவுக்குப் பின்னர் மகளை வளர்த்து ஆளாக்கிய ஜெயலட்சுமி அவரை திருமணம் செய்து கொடுத்த பின்னர் தனியாக வசித்து வந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அவரது மனநிலையில் குழப்பம் ஏற்பட்டது. மகள் ஜெயலட்சுமி மற்றும் உறவினர்கள் அவ்வப்போது வந்து அவரை கவனித்து சென்றனர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில்
கடந்த 2 ஆம் தேதி ஜெயலட்சுமி தனது உடல் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்துக் கொண்டார்.
பின்னர் உடல் கருகி அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வெவ்வேறு சம்பவங்களில் 2 வாலிபர்கள் தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை சேரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராமன்.இவரது மகன் சந்திரபோஸ்(வயது 21) இவர் உப்பிலியபுரம் எரக்குடி பகுதியைச் சேர்ந்த ஷாலினி என்பவரை கடந்த 2024 ஆம் ஆண்டில் திருமணம் செய்தார். குழந்தை இல்லை சந்திரபோஸ் மைசூரில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு
ஊர் திரும்பிய அவர் எரக்குடியில் உள்ள தனது மாமனார் வீட்டில் வசித்து வந்தார்.நேற்று இரவு வழக்கம் போல் அறைக்கு தூங்கச் சென்ற அவர் அதிகாலையில் பார்த்தபோது தூக்கில் பிணமாக தூங்கிக் கொண்டிருந்தார்.
அவரது தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
இது பற்றி அவரது தந்தை ராமன் உப்பிலியபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் அதேபோன்று சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அமையநல்லூர்
பகுதியில் உள்ள ஒரு வேளாண் தோட்டத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் புங்க மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என உடனடியாக தெரியவில்லை. இது பற்றி மல்லியம்பத்து
கிராம நிர்வாக அதிகாரி ஜெயராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் சோமரசம்பேட்டை போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!