எங்களிடம் 3 ஃபைல்கள் உள்ளன; அதை ஓபன் செய்ய வைத்துவிடாதீர்கள் என முதல்வர் விஜய் கூறுகிறார். தயவுசெய்து அந்த ஃபைல்களை உடனே திறந்து பார்த்து நடவடிக்கை எடுங்கள்; எதற்காகப் பயந்து 3 மாதங்களாகக் காலம் தாழ்த்துகிறீர்கள்? ஃபைலைத் திறக்க ஜோசியக்காரன் சொன்னால்தான் திறப்பீர்களா? அல்லது நல்ல நேரம் ஏதும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?” என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் காட்டமாகக் கேள்வியெழுப்பியுள்ளார். இதையடுத்து ‘ஜோதிடர்’ என்ற வார்த்தையை நீக்க நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
