திருச்சி, உறையூர் தாத்தையாங்கார்ரோடு மருதப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி ராஜலட்சுமி (65). இவர் நேற்று மாலைதிருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பஸ் ஸ்டாண்ட் அருகில் சாலையில் நடந்து கொண்டு இருந்தார். அப்பொழுது அவரை பின் தொடர்ந்து வந்த மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்ற அரசு பேருந்து எதிர்பாராதமாக ராஜலட்சுமி மீது மோதியது. இந்த விபத்தில் பஸ்சில் முன் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி ராஜலட்சுமி பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து கண்டோன்மென்ட் வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான ராஜலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து வடக்கு போக்குவரத்து துணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

