Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.43 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.43 லட்சம் மோசடி

கள்ளக்குறிச்சி: அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.43 லட்சத்தை மோசடி செய்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூர் கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் மனைவி ரூபாதேவி (31). இவரிடம் இதே ஊரை சேர்ந்த வினோத்குமார், அவரது தந்தை ராமமூர்த்தி, வினோத்குமாரின் மனைவி ஷோபனா மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் சீனிவாசபுரம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ரவி, விஜய பிரபாகரன் ஆகிய 5 பேரும் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறினார்களாம். இதனை நம்பி ரூபாதேவி மொத்தம் ரூ.42 லட்சத்து 65 ஆயிரம் பணத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் மேற்கண்ட நபர்கள் கூறியதுபோல் அரசு வேலை எதுவும் வாங்கி தரவில்லை. மேலும் ரூபாதேவியிடம் வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளனர். இதுகுறித்து ரூபாதேவி கள்ளக்குறிச்சி போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் வினோத்குமார், ராமமூர்த்தி, ஷோபனா, ரவி, விஜயபிரபாகரன் ஆகிய 5 பேர் மீது போலீசார் மோசடி பிரிவில் வழக்குபதிவு செய்து தலைமறைவான 5 பேரையும் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!