செங்கல் சூளையில் தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி
கடலூர் மாவட்டம் ஸ்ரீ நெடுச்சேரி காளியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன்( வயது 38) இவர் திருச்சி மாவட்டம் முசிறி அருகே அய்யம்பாளையத்தில் உள்ள செங்கல் சூளையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
செங்கல் சூளையில் உள்ள கட்டிடத்தில் மின் விளக்கை ஆன் செய்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை சக தொழிலாளிகள் மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மனைவி செல்வநாயகி கொடுத்த புகாரின் அடிப்படையில் முசிறி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
திருச்சி மாவட்டம் முசிறி வேலக்க நாதன் சக்கிலிய தெரு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 47 )கூலி தொழிலாளி.
மதுவுக்கு அடிமையான இவர் போதையில் மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
இதனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செல்வராஜின் மனைவி கலா கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் மன உளைச்சலுக்கு ஆளான செல்வராஜ் அளவுக்கு அதிகமாக மது அருந்திக்கொண்டு வீடு திரும்பினார்.
பின்னர் மது போதையில் தனது உடல் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
பின்னர் உடல் முழுவதும் வெந்து அலறி துடித்த அவரை
மகன் இளங்கோவன் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தார் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் இளங்கோவன் கொடுத்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வடக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
