திருச்சி அரியமங்கலம் மில் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன். இவரது மகன் சதாம் உசேன் ( 19). இவர் அரியமங்கலம் மலையடிவாரம் தீப் பெட்டி கம்பெனி தெருவை சேர்ந்த அப்துல் ஆசாத் மகள் யாஸ்மின் (18) என்ற பெண்ணை காதலித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பல இடங்களுக்கு சென்று உள்ளனர். நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் திருச்சி ஜங்ஷன் ரவுண்டானா அருகில் உள்ள ஒரு தனியார் விடுதியில் கணவன்-மனைவி என கூறி அறை எடுத்து தங்கி உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் யாஸ்மினுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு உள்ளது. உடனே சதாம் உசேன் தனது நண்பர் ஷேக் அப்துல்லா (19) என்பவரது உதவியுடன் யாஸ்மினை தூக்கி கொண்டு வெளியே வந்துள்ளார். ஒரு ஆட்டோவில் அவரை ஏற்றிக்கொண்டு தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு யாஸ்மினின் நிலை மிக மோசமாக இருந்ததால் டாக்டர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்துள்ளனர்.
இதையடுத்து அதே ஆட்டோவில் யாஸ்மினை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் கண் டோன்மெண்ட் போலீசார் யாஸ்மினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், யாஸ்மினுக்கு சதாம் உசேனும், அவரது நண்பர் ஷேக் அப்துல்லா வும் சேர்ந்து ‘டெபன்டாடல்’ என்ற போதை மாத்திரையை கரைத்து ஊசி மூலம் செலுத்தியதும், இதில் அளவுக்கு அதிகமான போதை மருந்து காரணமாக அவர் இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குறிப்பிட்ட அந்த விடுதிக்கு வந்து விசாரணை நடத்தினர்.
விடுதி பணியாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.விடுதி அறையில் இருந்து யாஸ்மினுக்கு பயன்படுத்தப்பட்ட போதை மாத்திரை அட்டை மற்றும் ஊசி ஆகியவற்றையும் கைப்பற்றி உள்ளனர். இதில் டெபென்டாடல் தலா 10 மாத்திரை கொண்ட 7 அட்டைகள், ஊசி-1, மாத்திரை கலக்கிய நிலையில் 2 டீ கப், சிகரெட் துண்டு 3, ஒரு செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அளவுக்கு அதிகமாக போதை மருந்து செலுத்தப்பட்டதால் இளம்பெண் இறந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விசாரணையில் அதிர்ந்த போலீசார்இந்த சம்பவம் தொடர்பாக யாஸ்மினின் காதலன் சதாம் உசேன், அவரது நண்பர் ஷேக் அப்துல்லா ஆகிய இருவ ரையும் பிடித்து கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளன. காதலன் சதாம் உசேன் கூறிய தகவலால் விசாரணை நடத்தி வரும் போலீசார் ஒரு நிமிடம் அதிர்ந்து போய்விட்டனர்.நீண்ட நேரம் உல்லாசமாக இருக்கலாம் என கூறி, சதாம் உசேன் தனது காதலிக்கு போதை மாத்திரையை கரைத்து ஊசி மூலம் செலுத்தி உல்லாசமாக இருந்துள்ளார். அளவுக்கு அதிகமான போதை மருந்து காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு யாஸ்மின் திடீரென உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கடத்தல் மற்றும் சந்தேக மரணம் ஆகிய பிரிவுகளின் கீழ் சதாம் உசேன் மற்றும் அவருக்கு உதவிய அரவது நண்பர் ஷேக் அப்துல்லா ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய போதை மாத்திரைகள், ஊசிகளை லாட்ஜில் இருந்து பறிமுதல் செய்தனர். உயிரிழந்த யாஸ்மினுக்கும் சதாம் உசேனுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. கைதான சதாம் உசேனுக்கு போதை ஊசி மற்றும் மாத்திரைகள் எப்படி கிடைத்தது? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது யாஸ்மினின் தாயார் ஷகிலா பேகம் போதை பொருட்களை விற்பனை செய்து வந்த திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. தாய்க்கு தெரியாமல் யாஸ்மின் போதை மாத்திரிகளை எடுத்துக்கொண்டு காதலனுடன் திருச்சி தனியார் ஓட்டலுக்கு சென்று தங்கியதுடன் அங்கு இருவரும் போதை மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நீண்ட நேரம் உல்லாசமாக இருக்கலாம் என்று கருதி இவ்வாறு செய்ததாக காதலன் சதாம் உசேன் போலீசாரிடம் கூறியுள்ளார்.இந்த விவகாரத்தில் போதை பொருட்கள் சப்ளை செய்யும் யாஸ்மினின் தாயார் ஷகிலா பேகத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அவர் யார் யாருக்கு போதை பொருட்கள் சப்ளை செய்துள்ளார். அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் யார் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை முடிவில் இந்த சம்பவம் குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் எனதெரிகிறது.
