Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேவாலயத்திற்கு சென்ற இளம்பெண் மாயம்…. திருச்சி க்ரைம்

தேவாலயத்திற்கு சென்ற இளம்பெண் மாயம்.... திருச்சி க்ரைம்

தேவாலயத்துக்குச் சென்ற இளம் பெண் மாயம்

திருச்சி பாலக்கரை கெம்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய சந்தியாகு. இவரது 25 வயது மகள் அங்குள்ள தேவாலயத்துக்கு செல்வதாக கூறி புறப்பட்டுச் சென்றார் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் விசாரித்தனர் ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை அதைத் தொடர்ந்து ஆரோக்கிய சந்தியாக்கு பாலக்கரை போலீசை புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று தில்லை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 19 வயது இளம்பெண் மாயமானார். திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் அவரது 19 வயது மகள் மணப்பாறையில் உள்ள பருத்தி மில்லில் வேலை பார்த்து வந்தார் கடந்த 28-ந் தேதி தனது பாட்டியின் இறுதிச்சடங்குக்கு ஊருக்கு வந்தார் பின்னர் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார் இதை பற்றி அவரது தந்தை ராஜேந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாநகராட்சி தூய்மை பணியாளர் திடீர் தற்கொலை

திருச்சி கொட்டப்பட்டு இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் உலகநாதன் (56 )இவர் மாநகராட்சி 65 -வது வார்டில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார் . இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பணியின் போது இரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார் பின்னர் 15 நாட்கள் விடுப்பு எடுத்து மருத்துவம் பார்த்து வந்த உலகநாதன் திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார் இது பற்றி அவரது மனைவி ஜெயா கொடுத்த புகாரின் அடிப்படையில் பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஜெயில் கார்னர் பகுதியில் வாலிபர் சடலம்

திருச்சி கே கே நகர் ஜெயில் கார்னர் அருகாமையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார் அவர் யார் ?எந்த ஊரை சேர்ந்தவர் என உடனடியாக தெரியவில்லை இது பற்றி கொட்டப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் கே கே நகர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!