Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஓடும் பஸ்ஸில் செல்போன் திருடிய வாலிபர் கைது.. திருச்சி க்ரைம்

ஓடும் பஸ்ஸில் துணிகரம் செல்போன் திருடிய வாலிபர் கைது

திருச்சி அண்ணா நகர் இ.பி ரோட்டை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (29). இவர் நேற்று காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்து பால்பண்ணை செல்ல அரசு பேருந்தில் ஏறினார் அப்போது மர்ம நபர் ஒருவர் இவரது சட்டை பையில் இருந்து செல்போனை திருட முயன்றால் சுதாரித்துக் கொண்ட நவநீதகிருஷ்ணன் அவரை கையும் களவுமாக பிடித்தார் தொடர்ந்து அவரை காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர் விசாரணையில் அவர் திருச்சி தில்லை நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜனார்த்தனன் (25) என்பது தெரியவந்தது.போலீசார் அவரை கைது செய்தனர்.

தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை


திருச்சியில் தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி ஜான் தோப்பு ஈபி ரோடை சேர்ந்தவர் சுப்பிரமணியன் 50. இவர்
பிரபல தனியார் விற்பனை நிலையத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்தார் இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் மேலும் இவருக்கு கிட்னி மற்றும் இதய நோய் பாதிப்பு இருந்தது. கடந்த சில நாட்களாக பண உலைச்சலில் காணப்பட்ட சுப்ரமணியன் கடந்த எட்டாம் தேதி திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றால் உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!