Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் இளைஞர் மீது சரமாரி தாக்குதல்… 3 பேர் கைது

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

திருச்சி மாநகரம் பீரங்கி குள தெருவை சேர்ந்தவர் பிலால். இவருடைய சகோதரிக்கு சமஸ்பிரான் தெருவை சேர்ந்த ஜாபர் என்பவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
ஜாபர் குறித்து பெண் வீட்டார் தரப்பினர் விசாரித்து வந்துள்ளனர். ஜாபரின் நண்பரான சமஸ்பிரான் தெருவை சேர்ந்த யாசர் என்பவரிடம் விசாரித்த பொழுது அவர்,
ஜாபருக்கு போதைப்பழக்கம் உள்ளது என கூறியதாக கூறப்படுகிறது. இது குறித்து பெண்ணின் சகோதரர் பிலால், ஜாஃபரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜாஃபர் யாசரை அடிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனையழுத்து பிலால், யாசரிடம் தனியாக பேசி அவரை ஓயாமேரி சுடுகாடு அருகே அழைத்து சென்றுள்ளார். அங்கு பிலால், ஜாபர் அவருடைய நண்பர் சதாம் மற்றும் அடையாளம் தெரியாத 3பேர் சேர்ந்து யாசரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
தன்னை குறித்து தகவல் தெரிவித்த யாசரின் வாயை உடைக்க வேண்டும் என ஜாபர் கூறவே மற்றவர்கள் சேர்ந்து அவர் தாடையில் சரமாரியாக தாக்கி உள்ளனர் இதில் யாசரின் தாடை உடைந்துள்ளது. பின் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.
பலத்த காயமடைந்த யாசர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாசர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பிலால், ஜாஃபர் மற்றும் சதாம் ஆகிய மூவரை கோட்டை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
மாப்பிள்ளை குறித்து விசாரித்த பொழுது உண்மையை கூறியதற்காக மாப்பிள்ளையின் அண்ணன் மாப்பிள்ளை உள்ளிட்டோர் சேர்ந்து தங்கள் நண்பரையே தாக்கிய சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!