Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் கான்வாய் முன் பைக்கில் பாய்ந்த வாலிபர் – ரூ.8,000 அபராதம்!

சென்னை, நீலாங்கரை பகுதியில் தடுப்புகளை மீறி முதலமைச்சரின் கான்வாய் வாகனம் முன், பைக்கில் வந்த வாலிபருக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

நீலாங்கரை இல்லத்திலிருந்து நேற்று சட்டமன்றத்திற்கு முதலமைச்சர் விஜய் புறப்பட்டார். அப்போது, நீலாங்கரை சிக்னல் அருகே பாதுகாப்பு காரணங்களுக்காக அப்பகுதியில் போக்குவரத்தை போலீசார் நிறுத்தி வைத்திருந்தனர்.

அப்பொழுது போலீசார் தடுப்புகளை மீறி இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் அதிவேகமாக முதலமைச்சர் வந்து கொண்டிருந்த பாதையில் எதிர் திசையில் சென்றார்.

அவரை போலீசார் தடுக்க முயற்சித்தும் அவர் வாகனத்தின் நிறுத்தாமல் வளைந்து வளைந்து சென்றார். உடனடியாக வாக்கி டாக்கி மூலம் போலீசார் தகவல் அளித்து மடக்கி பிடித்தனர்.

அப்போது நடத்திய விசாரணையில், கபாலீஸ்வரர் நகரைச் சேர்ந்த விஷால் (18) அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் என தெரிய வந்தது. மேலும் ஹெல்மெட் அணியாமலும், பைக்கின் பின் பகுதி ‘நம்பர் பிளேட்’ மற்றும் டிரைவிங் லைசன்ஸ் இல்லாததால் போலீசாரை கண்டதும் பயத்தில் பிடித்து விடுவார்கள் என எண்ணி தனது பைக்கில் அதிவேகமாக கபாலீஸ்வரன் ஆர்ச் வழியாக வந்ததாக விசாரணையில் கூறினர்.

பின்னர், டிரைவிங் லைசென்ஸ் தலைக்கவசம் அணியாதது, நம்பர் பிளேட் இல்லாதது மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காக அவருக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு பின்னர் பெற்றோரை வரவழைத்து இளைஞரை அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பினர்.

முதலமைச்சர் கான்வாய் வரும் நேரத்தில் போலீசார் தடுத்து நிறுத்தியும் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞரால் நீலாங்கரைப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!