Skip to content
Home » ரூ. 55 லட்சம் மதிப்புள்ள குட்காவை கடத்திய 2  பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது…  திருச்சி மாநகர கமிஷனர் எச்சரிக்கை…

ரூ. 55 லட்சம் மதிப்புள்ள குட்காவை கடத்திய 2  பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது…  திருச்சி மாநகர கமிஷனர் எச்சரிக்கை…

கடந்த 20.11.2022ம் தேதி, திருச்சி சென்னை பைபாஸ் சாலை, சஞ்சீவிநகர் சந்திப்பில், இளையதலைமுறையினர் எதிர்காலத்தை சீரழிக்கும் குட்கா போதை பொருள்களை விற்பனை செய்தவதற்காக கிருஷ்ணசிரி மாவட்டம், ஒசூரில் இருந்து 2  வாகனங்களில் 50 மூட்டைகளில் சுமார் ரூ.55 லட்சம்  மதிப்புள்ள 1070 கிலோ குட்கா போதை பொருட்களை வெங்காய மூட்டைகளுக்கிடையே வைத்து பதுக்கி கடத்தி வந்த, கிருஷ்ணகிரி மாவட்டம் பேரண்டபள்ளியை சேர்ந்த சீனா (எ) சீனிவாசன் (27 ) மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தப்பள்ளியை சேர்ந்த சேகர் (28 ) என்ற 2 வாலிபர்களை கைது செய்து, வழக்குப்பதிவு செய்தும், வாகனத்தையும் பறிமுதல் செய்தும், நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சீனீவாசன் மற்றும் சேகர் மீது தொடர்ந்து குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்பவர்கள். என விசாரணையில் தெரியவருவதால் இவர்களின் குற்ற நடவடிக்கையை தடுக்கும் விதமாக சம்பந்தபட்ட கோட்டை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசிலனை செய்து, திருச்சி மாநகர  கமிஷனர் கார்த்திகேயன் 2 வாலிபர்கள் மீதும் குண்டாசின் கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். மேலும், திருச்சி மாநகரில் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்பவர்கள் மீதும், பள்ளி மற்றும் முக்கிய அலுவலகங்கள் அருகே இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர  கமிஷனர் கடுமையான எச்சரிக்கை  விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!