அரசு கட்டிடத்தில் 1 லட்சம் தளவாட பொருட்கள், திருட்டு..
திருச்சி காஜாமலை ஜேகே நகர் பகுதியில் குடிநீர் வடிகால் வாரிய கட்டிட பொருட்கள் சோதனை ஆய்வகம் உள்ளது இந்த ஆய்வகத்தில் கட்டிட பொருட்களை வைத்திருப்பது வழக்கம்.
.சம்பவத்தன்று அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றுவிட்டனர். இந்த நிலையில் மர்ம ஆ சாமி ஒருவன் அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்குள்ள இரும்பு ராடு மற்றும் ஏசி வயர் உள்ளிட்ட பொருட்களை திருடி கொண்டு சென்று விட்டார். இது தொடர்பாக என்ஜினியர் ஏர்போர்ட் போலீசில் புகார் கொடுத்தார். இப்புகாரின் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடி கேமராவை வைத்து சோதனை செய்து பார்த்த போது அதில் ஒரு மர்ம ஆசாமி பொருட்களை திருடி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த காமராஜர் நகரை சேர்ந்த கார்த்தி குமார் (24) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
கேகே நகரில் முதியவர் மாயம்..
திருச்சி கே கே நகர் சுப்பிரமணியபுரம் பெரியார் தெருவை சேர்ந்தவர் முகமது கனி (வயது 57) இவர் கடந்த 7 ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அவரது மகன் முகமது சலீம் கேகே நகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன முகமது கனியை தேடி வருகின்றனர், –
அரசு பெண் டாக்டரின் காரில் ரூ 60, ஆயிரம் பணம் திருட்டு
விழுப்புரம் மாவட்டம், ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் இவரது மனைவி கவிதா (வயது 32) இவர் அரசு டாக்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். கடந்த 8ம் தேதி டாக்டர் கவிதா தனது கணவரின் சகோதரரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்க காரில் திருச்சி விமான நிலையத்திற்கு வந்துள்ளார். பின்னர் விழுப்புரம் செல்லும் போது திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் இரவு காரை நிறுத்திவிட்டு உணவு சாப்பிட்டு உள்ளார்.பிறகு காரை எடுத்துக்கொண்டு ஊருக்கு செல்ல முயன்ற போது காரில் இருந்த . கைப்பை பார்த்த பொழுது காணாமல் போய் இருப்பது கண்டு அதிர்ச்சிடைந்தார். அந்த கைப்பையில் ரூ. 60 ஆயிரம் பணம் திருட்டுப் போய் இருப்பது தெரிய வந்தது. இது குறித்து பெண் டாக்டர் கவிதா கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காரில் இருந்த பணத்தை திருடிய மர்ம ஆசாமிகள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினார்கள். அந்தப் பகுதியில் உள்ள சிசிடி கேமராவை ஆய்வு செய்து பார்த்த பொழுது 2 மர்ம ஆசாமிகள் டாக்டர் கவிதா காரை நிறுத்தி சென்டி பிறகு அருகில் சென்று அந்த பணப்பை எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ரூபாய் 60, ஆயிரம் பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை வலைவிசி தேடி வருகின்றனர்.

