Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

10 ரூபாய் டாக்டர் ரத்தினம்பிள்ளை (96) காலமானார்..

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சீனிவாசபுரத்தில் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக 10 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற்றுக்கொண்டு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் ரத்தினம்பிள்ளை காலமானார்.

Image

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையின் அதிசய டாக்டர் என அனைவராலும் போற்றப்படுபவர் ரத்தினம்பிள்ளை. இவர் பட்டுக்கோட்டை சீனிவாசபுரத்தில் கடந்த 65 ஆண்டுகளுக்கு மேலாக ரூ.10 மட்டும் கட்டணமாக பெற்றுக் கொண்டு அனைத்து தரப்பு மக்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார். அவர் இன்று வயது மூப்பு காரணமாக இன்று இயற்கை எய்தினார். அவருக்கு வயது 96. தமிழ்நாட்டில் அதிக பிரசவம் பார்த்த ஆண் டாக்டர் என்ற பெருமை பெற்றவர். மருத்துவ பணி தொடங்கும்போது வாங்கிய பீஸ் ரூ.2. 1997க்கு பிறகு ரூ.5. 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு இன்று வரை ரூ.10 மட்டுமே பெற்றுக்கொண்டு சிகிச்சை பார்த்து வந்தார். இவரது மறைவு அந்த பகுதி மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!