Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேர்வுக்கு படிக்காததை தாய் கண்டித்ததால் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை….

தஞ்சை கீழராஜ வீதியை சேர்ந்தவர் நிர்மலா (38). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தையல் கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன்.

இதில் இளைய மகளான பூஜா (16), தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது தேர்வு நடந்து வரும் நிலையில் பூஜா தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்ததாக கூறப்படுகிறது. பூஜாவை தேர்வுக்கு சரியாக படிக்கவில்லை என கூறி தாயார் நிர்மலா கண்டித்தாராம்.

இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்த நேற்று முன்தினம் மாலை பூஜா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு கொண்டார். உடன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பூஜாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நிர்மலா கொண்டு சென்றார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பூஜா சேர்க்கப்பட்டார். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி பூஜா இறந்தார்.

இது குறித்து தஞ்சை கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியினரிடயே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!