Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

100 நாள் வேலை:ரூ.2,999 கோடி விடுவித்தது மத்திய அரசு

மகாத்மா காந்தி  100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் கிராம மக்கள் பயன்பெற்று வந்தனர். கடந்த ஆண்டு நடந்த இந்த வேலைக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. இதனால் தற்போது இந்த வேலை பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு ரூ.4, 034 கோடி மத்திய அரசு தர வேண்டும். ஆனால் அதனை தராமல் இழுத்தடித்து வந்தது.

இது குறித்து தமிழக முதல்வர் பலமுறை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தும் ஏற்கப்படவில்லை. இந்த நிலையில் 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கான ரூ.2,999 கோடி மட்டும் மத்திய அரசு விடுவித்துள்ளது. மீதமுள்ள 1,035 கோடி எப்போது விடுவிக்கப்படும் என மத்திய அரசு இன்னும்  தெளிவுபடுத்தவில்லை.

error: Content is protected !!