கேரளம் மாநிலம் திருச்சூரில் பூரம் திருவிழா ஏற்பாடுகளுக்காக வைத்திருந்த பட்டாசுகள் வெடித்த விபத்தில் 13பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்துள்ளனர். பிரசித்திபெற்ற திருச்சூர் பூரம் விழா ஏப்ரல் 26இல் தொடங்கும் நிலையில் முண்டத்திகோடு பகுதியில் பட்டாசுகள் வைக்கப்பட்டன.கொட்டகை அமைத்து பாதுகாக்கப்பட்டு வந்த பட்டாசுகள் கடும் வெப்பத்தால் திடீரென வெடித்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பட்டாசு விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு திருச்சூர் பகுதி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
