Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஓடும் பஸ்சில் 14 சவரன் நகை திருட்டு… தஞ்சையில் பரபரப்பு

சேலம் மகேந்திரபுரி சிபி தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மனைவி சுந்தரி (53). இவர் கடந்த 21ம் தேதி காலை சேலத்திலிருந்து பஸ்சில் தஞ்சாவூர் இபி காலனியில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வந்தார்.

உறவினர் வீட்டுக்கு வந்த பின்னர் தான் கொண்டு வந்திருந்த கைப்பையில் வைத்திருந்த 10 பவுன் செயின், 4 பவுன் நெக்லஸ் மற்றும் தோடு என மொத்தம் 14 பவுன் நகைகளை தேடி பார்த்துள்ளார். ஆனால் நகைகளை காணவில்லை. தஞ்சாவூர் அருகே வரும் போது பையில் வைத்திருந்த நகைகள் இருந்தை பார்த்துள்ளார். ஆனால் வீட்டிற்கு வந்த பின்னர் நகைகளை காணவில்லை. இதனால் பஸ்சில் வல்லம் அருகில் வரும் போது நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்று இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தார்.

இதுகுறித்து சுந்தரி வல்லம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் வல்லம் சப்-இன்ஸ்பெக்டர் (பொ) சபீதா தமிழஞ்சனி மற்றும் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பஸ்சில் வரும் போது பெண்ணிடம் இருந்து நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்று சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!