Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பொலிவியாவில் விமானம் விழுந்து நொறுங்கி 15 பேர் பலி..

ரூபாய் நோட்டுகளை ஏற்றிச் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியதில் 15 பேர் உயிரிழந்தனர். விமானம் விழுந்து நொறுங்கியதில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 15-க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்தன.

அந்நாட்டின் மத்திய வங்கியிலிருந்து புதிய பணத் தாள்களை ஏற்றிச்சென்றுகொண்டிருந்த அந்த விமானம், பொலிவியா தலைநகர் லா பாசுக்கு அருகே உள்ள ‘எல் அல்டோ’ நகரில், பரபரப்பான சாலை ஒன்றில் விபத்துக்குள்ளானது. விமான விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

விமானம் விழுந்து நொறுங்கியதில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 15-க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்தன. உயிரிழந்தவர்கள் விமானத்தில் பயணித்தவர்களா அல்லது அப்பகுதியில் இருந்தவர்களா என அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு மக்கள் கூட்டமாகச் சென்று தரையில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டிருந்ததைக் சமூக ஊடகப் பதிவுகள் காட்டின. அவர்களை அங்கிருந்து வெளியேற்ற உள்ளூர் அதிகாரிகள் தண்ணீர்க் குழாய்களையும் கண்ணீர்ப் புகையையும் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், விபத்தைத் தொடர்ந்து ‘எல் அல்டோ’ அனைத்துலக விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய விமான நிறுவனம் தெரிவித்தது.

error: Content is protected !!