Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையுடன் துவங்கிய எம்எல்ஏ….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பிலில் உள்ள அரசு ஆதிதிராவிட மேல்நிலைப் பள்ளியில் இரண்டு வகுப்பறை கொண்ட புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை பணிகளை எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் தொடங்கி வைத்தார். லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் அன்பில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் கூடுதலாக இரண்டு வகுப்பறைகள் கொண்ட கூடுதல் பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியிலிருந்து ரூ36 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள்தொடக்க விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு லால்குடி சௌந்தர பாண்டியன் எம் எல் ஏ கலந்து கொண்டு பூமிபூஜை பணிகளை தொடங்கி வைத்தார்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் (பொறுப்பு) கீதா. ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன், பள்ளி தலையாசிரியர் ராஜேந்திரன்,அரசு வழக்கறிஞர் மதிவாணன்,ஊராட்சி மன்ற தலைவர் சுதா சித்திரசேனன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜ்மோகன், முன்னாள் தலைவர் செளந்திரராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!