அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் அருகே மிஸ்ஸிஸிப்பி ஆற்றில் 129 பேருடன் சென்று கொண்டிருந்த ‘அமெரிக்கன் ஹெரிடேஜ்’ சொகுசு கப்பல் மீது, ‘அட்லாண்டிக் ஆஸ்பால்ட்’ என்ற சரக்கு கப்பல் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சொகுசு கப்பல் ஒருபக்கமாகச் சரிந்த நிலையில், உள்ளே சிக்கிய 32 பேர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மீட்புப் பணியாளர்களின் துரித நடவடிக்கையை அதிபர் டிரம்ப் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
அமெரிக்காவில் 2 கப்பல்கள் மோதல்; 32 பேர் காயம்
