Skip to content

லஞ்சம் வாங்கிய வழக்கு… செயல் அலுவலருக்கு 2 ஆண்டு சிறை…

திருச்சி மாவட்டம், மணப்பாறை மாரியம்மன் கோவிலில் கடந்த 2021ம் வருடம் மணிகண்டன் என்பவர் மொட்டை அடிக்கும் தொழில் செய்து வந்தார். மணிகண்டனிடம் கோவில் செயல் அலுவலர் வினாயகவேல் கோவிலில் தொடர்ந்து மொட்டை அடிக்கும் தொழில் செய்ய ரூ.700ஐ லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத மணிகண்டன் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஆய்வாளர் பிரசன்னவெங்கடேஷிடம் புகார் செய்துள்ளார். வினாயகவேலை பிரசன்னவெங்கடேஷ் கையும் களவுமாக பிடித்து கைது செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் லஞ்சம் வாங்கியது உறுதியானதால் வினாயகவேலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அபராதத்தை செலுத்த தவறினால் 3 மாத சிறைதண்டனையும் வழங்கி சிறப்பு நீதிமன்ற சிறப்பு நீதிபதி புவியரசு தீர்பளித்தார்.

error: Content is protected !!