Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2வது நாளாக டாஸ்மாக் பணியாளர்கள் கடையடைப்பு போராட்டம்


டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் காலி மது பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் மற்றும் காலி பாட்டில்கள் சேகரிப்பு போன்றவற்றை நிறுத்தி வைக்கக்கோரி டாஸ்மாக் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று திருச்சி மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் மதுபான கடைகளை பூட்டி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் மாவட்டம் முழுவதிலும் இயங்கி வந்த 142 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன.
பின்னர் போராட்டக்காரர்கள் துவாக்குடியில் உள்ள அரசு மதுபான கிடங்கு முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உதயசங்கர், தொழிற்சங்க பிரதிநிதிகளான முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை
நடத்தினர்.
டாஸ்மாக் கடைகள் திடீரென முழுவதுமாக நேற்று மூடப்பட்டதால் குடிமகன்களும் சரக்கு கிடைக்காமல் தள்ளாடினர். எங்கேயாவது கடை திறந்து இருக்குமா என்று குடி பெரியவர்கள் தேடி அலைந்தனர். இதற்கிடையில்
டாஸ்மாக் பணியாளர்களின் போராட்டத்தை தொடர்ந்து சென்னையில் அதிகாரிகள் டாஸ்மாக் மாநில தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் தரப்பில் ஒரு மாதத்தில் பிரச்சனைகளை சீர் செய்கிறோம் என தெரிவித்துள்ளனர். அதனை பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் பாரதி தலைமையிலான விற்பனையாளர்கள் சங்கம் ஏற்க மறுத்தது. அதனால் இன்று இரண்டாவது நாளாக திருச்சி மாவட்டத்தில் பரவலாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன.
போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கூறிய சங்கத்தைச் சேர்ந்தவர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் திருச்சி மாவட்டத்தில் முசிறி மண்ணச்சநல்லூர், துறையூர் உட்பட்ட பகுதிகளில் பல டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.இதனால் மதுபானம் அருந்த முடியாமல் குழி பிரியர்கள் கடும் அவதிப்பட்டனர்.

error: Content is protected !!