Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வாலிபரை தாக்கி பணம் செல்போன் பறித்த 3 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர், சமூக வலைதளத்தில் எலக்ட்ரானிக் பொருட்கள் குறைந்த விலைக்கு விற்பனை என்ற விளம்பரத்தை பார்த்து அதில் இருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். அதில் பேசிய நபர் குடோன் விக்கிரவாண்டி பைபாஸ் அருகே இருப்பதாகக் கூறி நேரில் வரச் சொல்லியுள்ளனர். இதனை நம்பி
அங்கு சென்ற வாலிபரை மூன்று பேர் கொண்ட கும்பல் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். மேலும் அவரது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஜிபே மூலம் தங்கள் கணக்கிற்கு மாற்றிக் கொண்டதுடன், அவர் செல்போன் மற்றும் கையில் வைத்திருந்த பொருட்கள் பறித்துள்ளனர். மேலும் அவரை கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட
வாலிபர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில், பணம் அனுப்பப்பட்ட எண்ணை வைத்து ஜிபிஎஸ் மூலம் கண்காணித்து விசாரணை நடத்தினர். இதில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் அன்பரசு (29), இசக்கி பாண்டி (27), தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்து விக்னேஷ் (26) ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!