Skip to content

ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது…. தஞ்சையில் பரபரப்பு..

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள முடச்சிக்காடு கலைஞர் நகர் பகுதியில் இன்று அதிகாலை ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக தஞ்சாவூர் சிறப்பு தனிப்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்று போலீசார் பார்த்தபோது கன்டெய்னர் லாரியில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு கஞ்சா மாற்றிக் கொண்டிருப்பது தெரியவந்தது . இதனை அடுத்து அங்கு சென்ற போலீசார் இரண்டு வாகனங்களையும் சோதனை செய்ததில் ஆந்திராவில் இருந்து 300 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது . இதை அடுத்து கண்டெய்னர் லாரி மற்றும் ஒரு காரை போலீசார் பறிமுதல் செய்தனர் பின்னர் கஞ்சா கடத்தி வந்த அண்ணாதுரை தர்மராஜ் முத்தையா ஆகிய 3பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். கஞ்சா எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என பல்வேறு கோணங்களில் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!