காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், பெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் 46 ஆயிரத்து 242 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 771 பெண் வாக்காளர்களும், 42 மூன்றாம் பாலினத்தவரும் என 3 லட்சத்து 1,055 வாக்காளர்கள் உள்ளனர். இதுபோல் பெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 564 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 91,123 பெண் வாக்காளர்களும், 63 மூன்றாம் பாலினத்தவரும் என 3 லட்சத்து 81 ஆயிரத்து 750 வாக்காளர்கள் உள்ளனர். உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 559 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 556 பெண் வாக்காளர்களும், 62 மூன்றாம் பாலினத்தவரும் என 2 லட்சத்து 46 ஆயிரத்து 177 வாக்காளர்கள் உள்ளனர். காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 909 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 829 பெண் வாக்காளர்களும், 37 மூன்றாம் பாலினத்தவரும் என 2 லட்சத்து 78 ஆயிரத்து 775 வாக்காளர்கள் என மாவட்டம் முழுவதும் 5 லட்சத்து 85 ஆயிரத்து 274 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 22 ஆயிரத்து 279 பெண் வாக்காளர்களும், 204 மூன்றாம் பாலினத்தவரும் என 12 லட்சத்து 7 ஆயிரத்து 757 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 10,54,274 வாக்களித்துள்ளனர்.
ஆலந்தூர் தொகுதியில் 431 வாக்குச்சாவடிகளும், பெரும்புதூர் தொகுதியில் 446 வாக்குச்சாவடிகளும், உத்திரமேரூர் தொகுதியில் 321 வாக்குச்சாவடிகளும், காஞ்சிபுரம் தொகுதியில் 348 வாக்குச்சாவடிகளும் என 1556 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. ஆலந்தூர் தொகுதியில் 431 வாக்குச்சாவடிகளில் 517 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 517 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 560 வாக்குப்பதிவு சீட்டு சரிபார்ப்பு கருவிகளும் என 1594 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. பெரும்புதூர் தொகுதியில் 446 வாக்குச்சாவடிகளில் 530 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 530 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 574 வாக்குப்பதிவு சீட்டு சரிபார்ப்பு கருவிகளும் என 1634 இயந்திரங்களும், உத்திரமேரூர் தொகுதியில் 321 வாக்குச்சாவடிகளில் 385 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 385 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 417 வாக்குப்பதிவு சீட்டு சரிபார்ப்பு கருவிகளும் என 1187 இயந்திரங்களும், காஞ்சிபுரம் தொகுதியில் 358 வாக்குச்சாவடிகளில் 429 வாக்குப்பதிவு இயந்தி ரங்களும், 429 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 465 வாக்குப்பதிவு சீட்டு சரிபார்ப்பு கருவிகளும் என 1323 இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.
சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் துணை ராணுவ படை 216 பேரும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார் 80 பேரும், ஓய்வுபெற்ற ராணுவ மற்றும் போலீசார் 456 பேரும், சட்டம்ஒழுங்கு போலீசார் 784 பேர் உட்பட 1536, போலீசார் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் தலைமையில் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 84.92 சதவிகிதம் ஓட்டு பதிவாகியுள்ளது. ஆலந்தூர், பெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகளில் இருந்து நேற்று இரவு முதல் இன்று அதிகாலை 3 மணி வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாகனங்களில் கொண்டு வரப்பட்டு காஞ்சிபுரம் பொன்னிக்கரையில் உள்ள அண்ணா உறுப்பு பொறியியல் கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர், மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சினேகா தலைமையில் தேர்தல் பார்வையாளர்கள், மண்டல அலுவலர்கள், துப்பாக்கி ஏந்திய போலீசார், மத்திய பாதுகாப்பு ரிசர்வ் படை வீரர்கள் முன்னிலையில் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பூட்டி சீல்வைக்கப்பட்டது. வாக்குப்பதிவு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு சுழற்சி முறையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிகாரிகள், போலீசார், பிஆர்பிஎப் வீரர்கள் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
