ஆந்திராவில் செல்ஃபி எடுக்க முயன்ற 3 மாணவிகள் நிலை தடுமாறி நீரில் மூழ்கி பலியான துயரம் நடந்துள்ளது. அனந்தகிரி அருகே உள்ள முலாகும்மி நீர்வீழ்ச்சிக்கு 4 மாணவிகள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, த்ரிஷா(17), ரத்னகுமாரி(16), பவித்ரா(16) மூவரும் மகிழ்ச்சியாக குளித்தபோது ஒரு மாணவி வீடியோ எடுத்துள்ளார். கண நேரத்தில் அந்த 3 மாணவிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
