
கோவை பீளமேடு பகுதியில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் பயன்படுத்தும் பேருந்துகள் மீது வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் சிறப்பு சோதனை நடைபெற்றது.
அப்போது, அங்கு செய்தி சேகரித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர்களை, எஸ்.ஆர்.டி.

பேருந்தின் ஓட்டுநர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையிலேயே மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையிலேயே இவ்வாறு நடந்துகொள்ளும் நபர்கள், சாலையில் பொதுமக்கள் மற்றும் பிற வாகன ஓட்டிகளிடம் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஏர் ஹாரன் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஊடகவியலாளர்களை மிரட்டிய ஓட்டுநர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
