கரூரில் தமிழ்நாடு தோட்டக்கலை துறை அலுவலர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கழுத்தில் காய்கறி மாலைகளை அணிந்து ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் தான்தோன்றி மலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு தமிழ்நாடு தோட்டக்கலை துறை அலுவலர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கழுத்தில் காய்கறி மாலைகளை அணிந்து உதவி தோட்டக்கலை அலுவலர் சங்க மாவட்டதலைவர் அருள்செல்வன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தோட்டக்கலைத் துறையில் தமிழக அரசின் வேளாண்மை உழவர் நலத்துறையினால் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள UATT 2.0 உழவர் அலுவலர் தொடர்பு திட்டமானது முழுக்க

முழுக்க தானிய மற்றும் மானாவரி பயிர் சாகுபடி பரப்பை மட்டும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
UATT 2.0 திட்டத்தின் மூலம் தோட்டக்கலை தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு வழங்க பிற துறை அலுவலர்களை இணைக்கும் போது தோட்டக்கலை விவசாயிகளுக்கு அவ்வப்போது தேவைப்படும் உயர் தொழில்நுட்பங்கள் சரிவர எடுத்துரைக்கப்படாமல் விவசாய பெருமக்கள் வெகுவாக பாதிக்கப்படுகிறார்கள் தோட்டக்கலை பயிர் சார்ந்த தொழில்நுட்பங்களை தோட்டக்கலைத் துறையில் தனித்துவ பட்டய படிப்பு படித்த தோட்டக்கலை துறை மட்டுமே விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்க முடியும் என உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் வரும் 21ஆம் தேதி மாநில தலைநகர் ஆன சென்னையில் காலவரையற்ற தொடர் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.
