பிரேக்அப் செய்த காதலியை பஸ் ஸ்டாண்டில் வைத்து காதலன் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளார். மங்களூருவை சேர்ந்த லாவண்யா(21), அவரது உறவினரான சேத்தன்(22) இருவரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கருத்து வேறுபாட்டால் லாவண்யா பிரிந்து சென்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சேத்தன், பட்டப்பகலில் லாவண்யாவை வெட்டி கொலை செய்தார். இது காதல் இல்லை; கொலைவெறி என நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
