Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆடி வௌ்ளி…வடபத்ர காளியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்…தரிசனம்

ஆடி வெள்ளியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற வடபத்ர காளியம்மன் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள். நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்.

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக போற்றப்படுகிறது. இன்று ஆடி மாதம் பிறந்ததை ஒட்டி பிரசித்தி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயம்,

பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் ஆலயம், வடபத்ர காளியம்மன் ஆலயத்தில் பக்தர்கள் காலை முதலே குவிந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதேபோல் தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் உள்ள நிசம்பசூதனி என்கிற வட பத்திரகாளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயத்தில் காலை முதல் பக்தர்கள் விளக்கேற்றி நீண்ட வரிசையில் நின்று அம்மனை சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிக அளவில் பக்தர்கள் வருவதால் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!