Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் அருகே 44 வயது ஆண் கத்தியால் குத்தி கொலை

கரூர் அருகே நேற்று இரவு 44 வயது ஆண் கத்தியால் குத்தி கொலை – உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணை.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை அடுத்த செல்லப்பட்ட நாயக்கன்பட்டி கிராமத்தை சார்ந்தவர் பொம்மன் (வயது 44). விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு அக்கிராமத்திலிருந்து அவரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருந்ததாகவும், நீதிமன்றம் சென்ற அவர், ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தன்னை அனுமதிக்க வேண்டும் உத்தரவு பெற்றுள்ளதாகவும், அதனடிப்படையில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் விழாவில் தன்னையும் அனுமதிக்க வேண்டும் எனக் கூறி குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் அவரது நண்பர் ராமன் என்பவருடன் மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக அதே கிராமத்தை சார்ந்த சிலர் அவரிடம் வம்பு இழுத்து பிரச்சினை செய்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் கரூர் மாவட்டம் முஷ்டகிணத்துப்பட்டியை அடுத்த கருவாடநாயகனூரில் வசிக்கும் அவருடைய 3 மனைவி ரேவதி வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் வந்தவரை, வழிமறித்த கும்பல் பொம்மனின் இடது பக்க கழுத்து மற்றும் இடது பக்க நெஞ்சில் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பொம்மனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வெள்ளியணை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கொலைக்கான காரணம் மற்றும் இதில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்க அனுமதி கோரிய நிலையில், ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!