இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
அரசியல் ரீதியாக கருத்தியல் ரீதியாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லலாம் வீட்டில் உட்கார்ந்து கொண்டு தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு அரசியல் செய்ய வேண்டும் என்று நினைத்து கூறுபவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
அனைவரும் பாராட்டக் கூடிய வகையில் தமிழக முதல்வர் தெளிவான ஒரு ஆட்சியை நடத்தி வருகிறார்.
உலக அளவில் தமிழ்நாடு விளையாட்டை கொண்டு செல்லும் அளவிற்கு முதல்வர் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.
திரை உலக நடிகரும் அவருடைய நெருங்கிய நண்பருமான அஜித் அவர்கள் கலந்து கொள்ளும் ரேஸ் பந்தயத்தை தொடங்கி வைத்தார்.
தமிழர்களுடைய பெருமையை உலக அளவில் எடுத்துச் செல்வதற்கு தமிழகம் முதல்வர் செய்து கொண்டிருக்கிறார்.
எதிர்க்கட்சியினர் விமர்சனத்திற்காக ஏதாவது ஒன்றை கூறிக் கொண்டிருக்கிறார்கள் அதனால்தான் அவர்கள் எதிர்க்கட்சியாகஅமர்ந்திருக்கிறார்கள்.
ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்துவதற்கு அனைவருக்கும் ஜனநாயக உரிமை உள்ளது அங்கு அவதூறாக பேசுவதும் ஆபாசமாக பேசுவதையும் கீழ்த்தரமாக பேசுவதை தான் எதிர்க்கிறோம்.
அதை திமுக செய்யவில்லை என்றால்தான் ஆச்சரியமாக இருக்கும்.
ஆபாசமாக அவதூறுவாக இழிவாக பேசுவது தான் திமுகவின் உடைய டி என் ஏ இப்படி தான் திமுக உடைய அமைச்சர்கள் வளர்ந்திருக்கிறார்கள் அப்படித்தான் கொளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இவர்களை வளர்த்து உள்ளார் இந்த பையனையும் அப்படித்தான் வளர்த்துள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் இரட்டை அர்த்தத்தில் பேசுவது அவதூறாக பேசுவது ஆபாசமாக பேசுவது அமைச்சர்களை கொச்சைப்படுத்தி பேசுவது போன்ற வேலையை தான் செய்து வருகிறார்.
தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களை மட்டுமல்ல பொதுமக்கள் பெண்கள் அனைவரையும் இழிவாக பேசினால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னாள் அமைச்சர்கள் பொறுப்புணர்வோடு பேச வேண்டும் பேச்சிலேயே ஒரு அறம் இல்லை என்றால் எப்படி நீங்கள் அறநிலையத்துறையை அமைச்சராக இருந்தீர்கள்.
மக்கள்தான் இதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
மூன்று மாதத்தில் மட்டும் இந்த சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படவில்லை அனைத்தையும் சரி செய்து வருகிறோம்..
அனைத்து பிரச்சினைகளையும் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வருகிறது.
தமிழக முதல்வர் சட்டமூலத்தை சீர்படுத்துவதற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஐந்து வருடங்களாக செய்தித்தாள்களை இவர்கள் படிக்கவில்லை என்று தான் அர்த்தம்.
மழை நின்னாலும் தூவானம் விடுவதில்லை என்ற ஒரு வார்த்தை இருக்கிறது. அதுபோல் கடந்த ஆட்சி கால இந்த சீர்கேடுகளை சரி செய்து வருகிறோம்.
நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அமைச்சர் ரமேஷ் கூறினார்.
