கிருஷ்ணராயபுரம் அருகே சேங்கலில் தவெக சட்டமன்ற உறுப்பினர் சத்யா -வை முற்றுகையிட்ட விவசாயிகள், கூட்டுறவு கடன் தள்ளுபடி குறித்து கடுமையான கேள்வி எழுப்பிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலால் பரபரப்பு.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே சேங்கல் பகுதியில் நேற்று, தொடர் மின்வெட்டு, அரசு பேருந்து வழித்தடத்தை திடீரென நிறுத்தியது, 100 நாள் வேலை கொடுக்காததை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காவல்துறையினர், அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அந்த வழியாக வந்த கிருஷ்ணராயபுரம் தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர் சத்தியா காரில் இருந்து இறங்கி பொதுமக்களிடம் எதற்காக மறியல் செய்கிறீர்கள் என கேட்டபோது எல்லாம் உங்கள் ஆட்சியை கண்டித்து தான் போராட்டம் என தெரிவித்துள்ளனர்.
அந்தப் பகுதியில் இருந்த விவசாயிகள் ஒன்று கூடி கூட்டுறவு கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என கூறிவிட்டு குறைந்த அளவு பணம் மட்டும் தள்ளுபடி, குறுகிய கால அளவு வாங்கிய கடன் மட்டும் தள்ளுபடி என பல்வேறு நிபந்தனைகளை விதிப்பதால் விவசாயிகள் பாதிப்படைகிறோம்.
நீங்கள் கூறிய வாக்குறுதி கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் வாங்கிய கடன் முழுவதும் தள்ளுபடி செய்வோம் என கூறிவிட்டு விவசாயிகளை ஏமாற்றுகிறீர்களா நாங்கள் என்ன முட்டாள்களா என கடுமையான கேள்வி எழுப்பியதால் சட்டமன்ற உறுப்பினர் திகைத்து நின்று பதில் கூற முடியாமல் கிளம்பி சென்றுள்ளார் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
