Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கும்பகோணத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி…தொடக்கம்

கும்பகோணத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி…தொடக்கம்

15 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி இன்று கும்பகோணத்தில் துவங்கியது. வேளாண் துறை அமைச்சர் வினோத் இல்லத்திலிருந்து கணக்கெடுக்கும் பணி துவங்கியது . இதில் மாநகராட்சி மற்றும் புள்ளியியல் துறையினர் பங்கேற்பு .

இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பது வழக்கம். கடந்த 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு கணக்கெடுப்பு பணிகள் நடைபெறவில்லை.
2021 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் தொகை கணக்கெடுக்கும்

பணி நடைபெறவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி துவங்கியது .

கும்பகோணத்தில் வேளாண் துறை அமைச்சர் வினோத் வசிக்கும் பிள்ளையார் கோவில் தெரு வீட்டிலிருந்து மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி துவங்கியது . இன்றிலிருந்து இந்த மாதம்

வரை நடைபெறும் கணக்கெடுப்பில் அடிப்படை விபரங்கள் மட்டும் பெறப்படும் அடுத்த மாதம் ஒவ்வொரு வீட்டிலும் 30 வகையான கேள்விகள் கேட்கப்பட்டு விவரங்கள் கணக்கெடுக்கப்படும் .

இந்த முறை கணக்கெடுப்பு என்பது முழுவதும் டிஜிட்டல் முறையில் என்பது குறிப்பிடத்தக்கது .

error: Content is protected !!