ஹரியானா மாநிலம், பரிதாபாத்தில் ஆழ்துளைக் கிணற்று அருகில் நின்றிருந்த டிராக்டரில் விளையாடிக் கொண்டு இருந்த போது 3 வயது சிறுமி தவறி விழுந்தார்.
நேற்று (செப் 27) மாலை 6 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது; பிறகு இரவு 7.45 மணிக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. பிறகு இரவு 9.05 மணிக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
ஹரியானா மாநில மீட்பு படையினர், போலீசார், தீயணைப்புத் துறையினர் ஆகியோருடன் இணைந்து மீட்புப் பணிகள் மேற்கொண்டனர். 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இன்று (செப் 28) அதிகாலை 3.50 மணிக்குச் சிறுமி மீட்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
மருத்துவ சிகிச்சையின் போது சிறுமி உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.10 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்த சம்பவம் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
