Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவையில் பி.ஆர்.ஜி. அருண்குமார் முன்னிலையில் 300 பேர் அதிமுகவில் இணைந்தனர்

கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் அதிமுக சார்பாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் திமுகவில் இருந்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் முன்னாள் திமுக நிர்வாகி எஸ் ஆர் கந்தசாமி தலைமையில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் முன்னிலையில் அஇஅதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

அதிமுகவில் இணைந்த அவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் கட்சித் துண்டு அணிவித்தும், நலத்திடங்களை வழங்கியும் கட்சியில் இணைத்துக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விக்னேஷ் சுப்பையன், பகுதி கழக செயலாளர் மாரிச்சாமி, வட்டச் செயலாளர்கள் சுரேஷ், மாரப்பன், காளிச்சாமி, ஜெயக்குமார், ஐ டி விங் மணிகண்டன், குணசேகரன், கிருஷ்ணவேணி உள்பட கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!